advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு..விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மே 24, 2025 3:10 முற்பகல் |

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று  கடைசி நாளாகும்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் தேர்வர்கள் 25.04.2025 முதல் 24.05.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரே கட்ட தேர்வு, 10-ம் வகுப்பு தகுதி போதும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வை லட்சக்கணக்கில் எழுதி வருகின்றனர்.குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 42 வரை . ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 37 வரை . இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் குரூப் 4 தேர்வில்   கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுகடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement