advertisement

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..தமிழக சுகாதாரத்துறைகள் தீவிர கண்காணிப்பு

மே 24, 2025 3:28 முற்பகல் |

!

கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு  பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில்,  கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில்  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தமிழகத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் கேரளாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement