advertisement

கமல்ஹாசனுக்கு தடை விதித்துள்ள நீதிமன்றம்

ஜூலை 05, 2025 4:42 பிற்பகல் |


  
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ' தக் லைப் ' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், ' தமிழ் மொழியில் இருந்து பிறந்தது தான் கன்னடம்', எனப் பேசியிருந்தார்.

இந்த கருத்துக்கு கன்னட அமைப்புகளில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கமல்ஹாசன் இவ்வாறு பேசியதற்கு மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் 'தக் லைப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்றும் போர்ராட்டம் நடத்தினார்கள். மேலும் கமல் நடித்த ' தக் லைப் '  படத்தையும் கர்நாடகாவில் வெளியிட தடை விதித்தது. அத்துடன், கன்னட சினிமா வர்த்தக சபையும் படத்தை வெளியிட தடை விதிக்கிறோம் என்று தெரிவித்த நிலையில், இது தொடர்பாக கமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கன்னட சாகித்ய பரிஷத் என்ற அமைப்பு, '' கன்னடம் மொழி மற்றும் கலாசாரம் தொடர்பாக அவதூறாக கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை விதிக்க வேண்டும், '' எனக்கூறி கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ' கன்னடம் மொழி, கலாசாரம், நிலம் மற்றும் இலக்கியம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவிக்க தடை விதித்ததுடன், மனு குறித்து ஆகஸ்ட் 30-க்குள் பதிலளிக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளார். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement