திருநெல்வேலியில் காங்.,சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணி கூட்டம்
ஜூலை 05, 2025 4:59 பிற்பகல் |
திருநெல்வேலி மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணி கூட்டம் மற்றும் காங்கிரஸ் வார்டு - கிராம கமிட்டி அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை MLA , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில மேலாண்மை குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்று வருகிறார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர் மனோகரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.உடன் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, கிழக்கு மாவட்ட வக்கீல் அணி தலைவர் சிவனு பாண்டியன்மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துக்கள்