பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை; கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அமல்
ளில் வகுப்பறைகளில் இருக்கைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடைசி இருக்கை என்ற அடையாளத்தை மாற்றி, அனைவரும் ஒரே மாதிரியான வடிவில் அமர வைக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
மாணவர்களிடையே கடைசி பெஞ்ச் என்ற எண்ணத்தை மாற்றி, அனைத்து மாணவர்களில் மீது ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில் வகுப்பறைகளில் பெஞ்ச்-களை “ப” வடிவில் மாற்றியமைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மலையாள படத்தில் இடம்பெற்ற காட்சிகளை மையமாக வைத்து, கேரளாவில் சில பள்ளிகளில் வகுப்பறை இருக்கைகள் U அல்லது V வடிவில் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அளவில் நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இந்த முறையை அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
" No More Back Benchers " கேரளாவில் தொடங்கிய மாற்றம்2024-ம் ஆண்டு வெளியான ’ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாள படத்தில் பள்ளி வகுப்பறையில் Last Bench என்ற எண்ணத்தை மாற்றி ’ப’ வடிவில் மாணவர்கள் அமர வைக்கும் வகையில் காட்சி இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் மாணவர்களிடம் கடைசி இருக்கை என்ற எண்ணம் மாற்றப்பட்டு, மாணவர்கள் நேரடியாக கவனம் செலுத்துவது அதிகரிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த படம் சமீபத்தில் ஒடிடி-யில் வெளியானது. இதில் கூறப்பட்ட கருத்தை முன்வைத்து கேரளாவில் ஒரு பள்ளியில் முதலில் ‘ப’ வடிவ சீட் அமைப்பு தொடங்கப்பட்டது. இதற்கு வரவேற்பு சிறப்பாக இருந்தது. மாணவர்கள் அனைவராலும் ஆசிரியர்கள் கவனிக்க முடிந்தது. முதல், இரண்டாம் மற்றும் கடைசி இருக்கும் என்பது இல்லாமல் போனது. குறிப்பாக அனைத்து மாணவர்களை ஆசிரியர்கள் கவனிக்கவும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையேயான உரையாடலை அதிகரிக்கவும் இந்த முறை உதவியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கேரளாவில் சில பள்ளிகள் இந்த முறையை பின்பற்ற தொடங்கினர். மேலும், மாற்றியமைக்கப்பட்ட இருக்கை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அப்படத்தின் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் அனுப்பியுள்ளனர். இந்த படம் முதலில் கேரள அமைச்சர் கே.பி. கணேஷ் குமாரிடம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கருத்தை ஏற்றுக்கொண்ட அவர், அவரின் குடும்பம் நடத்தும் பள்ளியில் இருக்கை மாற்றத்தை தொடங்கினார். தற்போது கேரளா பள்ளிகளில் ஏற்படும் இந்த மாற்றம் தேசிய அளவில் பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் மாறும் வகுப்பறைகள்
மாணவர்களின் கற்கும் ஆற்றலை அதிகரிக்கவும், ஆசிரியர்களுடனான உரையாடல் மற்றும் அனைவருக்குமான சம வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘ப’ வடிவிலான பெஞ்சு அமைப்பை தமிழ்நாட்டில் பள்ளிகள் ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. “No More Back Benchers" என்ற சற்றிக்கை அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இருக்கை மாற்றத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்