advertisement

குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் - முன்னாள் உபதலைவர் காேரிக்கை

ஜூலை 12, 2025 4:33 பிற்பகல் |

சேர்வைக்காரன்மடத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டுமென முன்னாள் உபதலைவர்  காேரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தேரி பகுதியில் உள்ளது நம்மாழ்வார் நகர் ஆகும்.மேற்கண்ட கிராமத்தில் பல வருடங்களாக மேல்நிலை தண்ணீர் தொட்டி இல்லாமல் அல்லல் பட்டு வந்தனர்.பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று  கிராமத்தில் கடந்த ஊராட்சி தலைவர் நாட்களில் முன்னாள் சேர்மன் நிதியில்  புதிய 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக சீரான தண்ணீர் பொதுமக்களுக்கு அளிக்கப்படுவதில்லை. தண்ணீர் தொட்டி திறப்பாளர் தினமும் அரை மணிநேரம் தான் தண்ணீர் திறப்பேன் என்று கூறி சுமார் 20 நிமிடத்தில் தண்ணீர் திறந்து விடுவதால் இந்த பகுதியில் தினமும் இரண்டு குடம் நீர் மட்டுமே வழங்கப்படும் நிலையில் உள்ளது.மேலும் ஆற்றுதண்ணீர் இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள நல்லியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் நம்மாழ்வார் நகர் குடியிருக்கும் பொதுமக்கள் தண்ணீருக்காக கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்படுகின்றது. 

மேலும் இப்பகுதியோடு இணைந்த பகுதியான செந்தியம்பலம் கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக  நல்லமலை ஆற்று தண்ணீர்   மக்களுக்கு சீராக அளிக்கப்படுவதில்லை.இதனால் இப்பகுதி மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மாவட்ட ஆட்சியர் இந்த பகுதி பொதுமக்களிடம் நேரடி கள ஆய்வு நடத்த வேண்டும்.மாண்புமிகு முதல்வர்  பொதுமக்களின்  குடிநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி மாவட்ட வாரியாக குடிநீர் புகாருக்கு பல்வேறு போன் நம்பர் அளித்துள்ளார்கள்.மேலும் மாண்புமிகு முதல்வர் தனி பிரிவில் மேற்படி நல்லமலை தண்ணீருக்காக  புகார் அளித்து சுமார் ஒரு மாத காலம் ஆகிறது.இன்று வரை தண்ணீர் பிரச்சனை தீர்க்கபடுழதிவ்லை.பிரதான வாழ்வாதாரமான குடி நீர் பிரச்சனையை ஊராட்சி நிர்வாகம் மற்றும் cwss தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிறைவேற்றாமல் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.இது மக்களின் அடிப்படை உரிமையை தடுப்பதாகும். 

மாவட்ட ஆட்சியர்  சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் நிலவி வரும் குடி நீர் பிரச்சனையை ஆய்வு செய்து மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதை உறுதிபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை வைத்துள்ளார்.


 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement