கோவில்பட்டி உழவர் சந்தையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு
ஜூலை 12, 2025 10:11 முற்பகல் |
கோவில்பட்டி உழவர் சந்தையில் ரோட்டரி சங்கம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். உழவர் சந்தை நிர்வாக அலுவலர் முத்துக்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் கண்ணன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.
கருத்துக்கள்