advertisement

இளையராஜா குடும்பத்தில் மருமகளா போக வேண்டியவள் நான்” -  வனிதா விஜயகுமார்

ஜூலை 12, 2025 11:37 முற்பகல் |

 

வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’(Mrs & Mr). இப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் பேனரில் வணிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தில் ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கிரன், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படம் நேற்று(11.07.2025) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிரன் வரும் காட்சியில் இளையராஜா இசையில் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிவராத்திரி தூக்கமேது’ பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் இளையராஜா தனனுடைய அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியுள்ளதாக கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது வருகின்ற 14ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக வனிதா விஜயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது, “இளையராஜாவிடம் நேரில் ஆசீர்வாதம் வாங்கினேன். அவரிடம் பாடல் பயன்படுத்துவது பற்றி சொன்னேன். அவரும் சரின்னு தான் சொன்னார். இதை ஏற்கனவே பேட்டிகளில் சொல்லியிருக்கேன். அவர் ஒரு லெஜெண்ட். இசையில் அவர் கடவுள் மாதிரி. கடவுளே நம்மிடம் கோச்சிக்கிட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும். சின்ன வயதில் இருந்து அவர் வீட்டில் நான் வளர்ந்திருக்கேன்” என்று மிகவும் எமோஷ்னலாகி கண்கலங்கியபடியே பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “சில விஷயங்கள் பேச முடியாது. உண்மையை சொன்னா தப்பாகிவிடும். அதனால் வேண்டாம்” என அழுதுக்கொண்டே பதிலளித்தார். 

அவர் வீட்டில் ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி நகையெல்லாம் எடுத்து அம்மனிடம் போட்டு பூஜை பண்ணியிருக்கேன். நிறைய உழைச்சிருக்கேன். அந்த குடும்பத்தில் மருமகளா போக வேண்டியவள் நான். இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது” என்று கோபத்துடன் வெளியேறினார்.   

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement