advertisement

அதிக பாரத்துடன் வந்த கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை

ஜூலை 12, 2025 4:12 பிற்பகல் |

அதிக பாரத்துடன்  வந்த 9 கனரக வாகனங்களின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  இரா. ஸ்டாலின்  பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் . அவரது உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி வந்த 9  கனரக லாரிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement