advertisement

ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுகள் கலெக்டர் நேரில் ஆய்வு

ஜூலை 12, 2025 8:57 முற்பகல் |

ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் நடைபெற்ற  டிஎன்பிஎஸ்சி (குரூப் 4) தேர்வினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் செய்யதம்மான் பொறியியல் கல்லூரி மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி 4) தேர்வு நடைபெற்றதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இது சம்மந்தமாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12.07.2025 அன்று நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (தொகுதி 4) தேர்விற்கு 29,126 பேர் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்ததில் , 24 , 631 நபர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வானது மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் 104 மையங்களில் நடைபெறுகின்றது. தேர்வினை கண்காணிப்பதற்காக 9 வட்டங்களிலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

மேலும் , 115 ஆய்வு அலுவலர்களும், 28 நகர் குழு அலுவலர்களும், 11 பறக்கும் படை குழுக்களும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர தேர்வு நடைபெறும் மையங்களில் 122 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அறையில் தேர்வு எழுத வருபவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடைபெற்றது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். ஆய்வின் போது , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement