விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? - சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடம் அடமானத்தில் வைத்திருந்தார்கள்?. ஓரணியில் எதற்கு திரள வேண்டும்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கா? ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்பதற்கா? தொகுதி மறுவரை என்ற பெயரில் தொகுதியை சீரழித்ததே கருணாநிதி தான். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள்.2026ல் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும், எந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். திமுக வரவேண்டும் என்று யாரும் வாக்கு செலுத்துவதில்லை. திமுக தீய ஆட்சி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும், அதை ஒழிக்க வேண்டும். திமுகவை எவ்வாறு அதிமுகவை வைத்து ஒழிக்க முடியும்.
அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. விஜய் போல அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பத்தான் செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துக்கள்