கவின் ஆணவக்கொலை; சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு
ஆக. 06, 2025 11:59 முற்பகல் |
சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ், கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.
கருத்துக்கள்