ராமநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாம் - கலெக்டர் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் ஜனார்த்தன் மாளிகையில் நடைபெற்ற " உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாமில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஜனார்த்தன் மாளிகையில் " உங்களுடன் ஸ்டாலின் "திட்ட முகாம் நடைபெற்றதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முகாமில் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்து வருவதை ஆய்வு செய்தார்.
மேலும், முகாமில் பொதுமக்கள் வருகையின் போது அவர்கள் அளிக்கும் மனுவினை பதிவு செய்யும் அலுவலர்கள் சரி பார்த்து தேவையான ஆவணங்களை கேட்டுப் பெற்று பதிவு செய்திட வேண்டும்.
மேலும், மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி மனுக்களை பூர்த்தி செய்து கணினியில் உடனுக்குடன் பதிவு செய்திட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அலுவலர்களை அறிவுறுத்தினார்.ஆய்வின் போது , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்