advertisement

மலேசியா இண்டி பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் .

ஆக. 06, 2025 7:19 முற்பகல் |

 

இந்தியாவில் உள்ள கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை  , அறிவியல் கல்லூரி, மலேசியாவில் உள்ள இண்டி சர்வதேச பல்கலைக்கழகம், தாய்லாந்தில் உள்ள ஷினவத்ரா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய, “கணிப்பொறி நுண்ணறிவும் பல்துறை பயன்பாட்டு ஆய்வுகளில் இடைச்செருக்குகளும்” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம், மலேசியாவில் உள்ள இண்டி சர்வதேச பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 

இந்தியாவின் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், இண்டி பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் வாங் லிங் ஷிங், ஷினவத்ரா பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் சௌ ஃபெய் ஆகியோர் தலைமை தாங்கினர். 
கருத்தரங்கில், “பல்துறை ஆராய்ச்சிகள், புதுமைகள் , ஒருங்கிணைப்பு, அறிவியல் , கலைப்பிரிவு, இயற்கை , உடற்கல்வி அறிவியல், பொறியியல் , தகவல் தொழில்நுட்பம், அறிவியல் , ஆரோக்கியம், வேளாண்மை , சுற்றுச்சூழல் அறிவியல், உளவியல், மேலாண்மை , சந்தையியல், கல்வி அறிவியல், மொழி , இலக்கியம், கணிதம், வேதியியல், உயிரியல்” ஆகிய தலைப்புகளில் 80 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

ஆய்வு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராசிரிய பெருமக்கள், ஆய்வாளர் பெருமக்கள்,  மாணவர் - மாணவியர்கள் ஆய்வுக் கட்டுரைகள் வாசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஜி.மரிய பிரசில்லா, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் என்.சுமதி, இண்டி பல்கலைக்கழக தரவு அறிவியல் , தொழில்நுட்பத்துறை பேராசிரியர் முனைவர் சித்தி சாரா மைதீன், ஷினவத்ரா பல்கலைக்கழக மேலாண்மைத்துறை விரிவுரையாளர் முனைவர் பிரதிக்சயா பண்டாரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement