தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது -பிரேமலதா
ஆக. 06, 2025 10:51 முற்பகல் |
நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. போதைப்பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்து இருக்கும் ஸ்டாலின், இதை சரியாக கையாண்டு சீர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜயகாந்த் படத்தை எக்காரணம் கொண்டும் எந்தக் கட்சியும் பயன்படுத்தக்கூடாது. கூட்டணிக்கு வரும் போது வேண்டுமானால் விஜயகாந்த் படத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சியும் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தக் கூடாது. என்று தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்