மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றுவேன் - பரபரப்பை கிளப்பிய சீமான்!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் "எது நமக்கான அரசியல்" என்ற தலைப்பில் இந்திய தேசிய லீக் கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு திமுக, பாஜக குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
திமுகவை எதிர்க்கும் யாரையும் “பாஜக B டீம்” என குற்றம் சாட்டும் பழக்கத்தை கண்டித்தார்.“உண்மையில் பாஜகவின் A டீம் திமுகதான். ஆனால் எங்களை B டீம் என்கிறார்கள். பாஜகவும், திமுகவும் இருவரும் வேண்டாம் என்பதே எங்களது நிலைப்பாடு” எனக் குறிப்பிட்டார்.
மோடி – திமுக உறவைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார்.“பிரதமர் மோடி 75 வயதுக்கு பின் பதவி விலகும் அழுத்தத்தில் உள்ளார். பிரச்சினை வந்தால் திமுகவின் 22 சீட்டுகள் உதவும் என அவர் நம்புகிறார். அதனால் தான் தமிழ்நாட்டுக்கு வந்தும் திமுக பற்றி விமர்சிக்கவில்லை” என்றார்.அத்துடன், வக்பு வாரிய சொத்துகளில் உள்ள கட்டிடங்களை ஆட்சிக்கு வந்தால் தரைமட்டம் ஆக்குவேன் என்றும், மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றுவேன் என்றும் அவர் ஆவேசமாக பேசினார்.சீமான் உரை, திமுக மற்றும் பாஜக தொடர்பான அரசியல் சூழலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கருத்துக்கள்