advertisement

வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது நடிகை ஷகிலா புகார்

ஆக. 12, 2025 11:53 முற்பகல் |

 

சாதி மோதல்களை உருவாக்கும் நோக்கில் திவாகர் கருத்துக்களை தெரிவித்து வருவதாக ஷகிலா புகார் தெரிவித்துள்ளார்.
 
“வாட்டர் மெலன் ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர், ரீல்ஸ் மூலம் பிரபலமானவர், நடிகர் சூர்யா கஜினி திரைப்படத்தில் வாட்டர் மெலனை கேரக்டரை வைத்துக்கொண்டு ஸ்டைலாக நடித்த காட்சியை திவாகர் ரீ கிரியேட் செய்தார். இந்த காட்சி மூலம் அவர் பிரபலமடைந்தார். தன்னை தானே “வாட்டர் மெலன் ஸ்டார்” என அழைத்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது பேச்சுக்கள் மற்றும் செயல்களால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளார். 

இந்தநிலையில், பிரபல நடிகை ஷகிலா “வாட்டர் மெலன் ஸ்டார்” என்று அழைக்கப்படும் திவாகர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், கடந்த சில தினங்களாக “வாட்டர் மெலன் ஸ்டார்” என்று சொல்லிக் கொண்டு யுடியூப் சேனலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் திவாகர் என்பவர் தனது யூட்யூப் சேனல் பேட்டியில், ஜி.பி.முத்துவின் சமூகத்தை குறிப்பிட்டு அவரைப் பற்றி பேச மறுத்ததோடு, நெல்லை படுகொலையை தனது சமூகத்தை குறிப்பிட்டு நியாயப்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.

திவாகரின் பேட்டிகள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாகவும், இது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்பட வேண்டும். திவாகர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார், சமூக ஊடகங்களில் திவாகரின் பேச்சு குறித்து பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.பி.முத்து, யூட்யூப் மூலம் பிரபலமானவர், மேலும் அவரது சமூகத்தை குறிப்பிடுவது சமூக பதற்றத்தை உருவாக்குவதாக கருதப்படுகிறது. திவாகரின் பேட்டிகள், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக கருதி, ஷகீலா இந்த புகாரை பதிவு செய்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement