advertisement

எங்கள் கூட்டணியை கண்டு மு.க.ஸ்டாலின் அச்சம் -ஆர்.பி.உதயகுமார்

டிச. 16, 2025 9:31 முற்பகல் |

 

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், அ.தி.மு.க. நிர்வாகிகள் சென்னை தலைமைக்கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும், தங்களது பெயரிலும் விருப்ப மனுக்கள் அளிப்பதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

இதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்,“தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர்,“சர்வாதிகார, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க 2026 தேர்தலில் மக்கள் தயாராகிவிட்டனர். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குமரி முதல் இமயம் வரை வெற்றி வரலாறு படைக்கும். இதை கண்டு ஸ்டாலினும், உதயநிதியும் அச்சத்தில் உள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “அ.தி.மு.க. என்ஜின் இல்லாத வண்டி என்று விமர்சிக்கும் தி.மு.க., இன்று சுவாசம் இல்லாத கட்சியாக மாறியுள்ளது. செயற்கை விளம்பரங்களால் உயிர் கொடுக்க முயல்கிறார்கள். ஆட்சி முடிவடைய இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை உயர்வு அறிவிப்பது அரசியல் நாடகம் மட்டுமே” என்றார்.

இறுதியாக,“அ.தி.மு.க.-வின் ஒரே எதிரி தி.மு.க. தான். வருகிற சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்ற நேரடி போட்டியாக இருக்கும். ஆயிரம் ஸ்டாலின்களும், லட்சம் உதயநிதிகளும் வந்தாலும் வெற்றி பெறுவது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான்” என்று ஆர்.பி.உதயகுமார் உறுதியாக தெரிவித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement