advertisement

தூத்துக்குடி : வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

டிச. 16, 2025 7:04 முற்பகல் |

 

தூத்துக்குடியில் இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்றம் முன்பு இ-ஃபைலிங் முறையை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எஸ்பி வாரியார் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கச் பொருளாளர் கணேசன் செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement