சவுதி அரேபியாவிலிருந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது
சவுதி அரேபியாவில் இருந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உலாபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் காதர் நேகாத்( 27). இவர் சவுதி அரேபியாவில் வசித்து வந்தார். அங்கிருந்தபோது அவர் இந்து கடவுள்கள் குறித்து அவதூறான கருத்துகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுதொடர்பாக பஜ்பே போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் அவர் தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் அப்துல் காதர், சவுதி அரேபியாவில் இருந்து நேற்று முன்தினம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்தார்.
அப்போது அவரை சோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அவர் போலீசாரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை அறிந்தனர். பின்னர் அவரை போலீசார் பிடித்து வைத்து பஜ்பே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பஜ்பே போலீசார் கோழிக்கோடுக்கு சென்று அப்துல் காதரை கைது செய்து மங்களூருவுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





கருத்துக்கள்