அமைச்சர் கீதாஜீவனை சந்தித்த தூத்துக்குடி செய்தியாளர்கள்
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டப் பத்திரிகையாளர்கள் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.
தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர் சங்கங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு அண்மையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி: பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 12,000-லிருந்து ரூ. 15,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம் ரூ. 6,000-லிருந்து ரூ. 7,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகளுக்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் செய்தியாளர் ஜெகஜீவன் ஆகியோர், போல்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவனை நேரில் சந்தித்தனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டப் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.





கருத்துக்கள்