தூத்துக்குடி மாவட்டத்தில் லோக் அதாலத்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 4,771 வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.21.68 கோடி மதிப்பிலான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் வசந்தி தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்காக தூத்துக்குடியில் 5 அமர்வுகள், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 14 அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.
5,149 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 4,617 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. இதன் மதிப்பு ரூ. 16.78 கோடியாகும். ஒட்டுமொத்தமாக நேற்று நடைபெற்ற விசாரணையில் 5,464 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில் 4,771 வழக்குகளுக்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வுத் தொகை ரூ. 21 கோடியே 68 லட்சத்து 86 ஆயிரத்து 595 ஆகும்.





கருத்துக்கள்