மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி திறந்து வைப்பு
சத்திரக்குடி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் , ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன் ஆகியோர் முன்னிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியினை திறந்து வைத்தார்.
சத்திரக்குடி ஊராட்சியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் சேமிப்பு நிதியின் கீழ் ரூ 49 இலட்சம் மதிப்பீட்டில் 02 போர்வெல் அமைத்து 30 ஆயிரம் கொள்ளவு கொண்ட 02 மேல்நிலை நீர் தொட்டிகளை அமைத்து குழாய்கள் இணைப்பு மூலம் பொதுமக்களின் தேவைக்கேற்ப வீடுகளுக்கு தண்ணீர் வழங்கும் வகையில் இத்திட்டப் பணிகள் மேற்கொண்டு பணிகள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.நிகழ்ச்சியில், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லெட்சுமி, பாலகிருஷ்ணன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள் , கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்