advertisement

திமுக.,வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது:  அப்பாவு பேட்டி

மார். 14, 2026 4:17 முற்பகல் |


 
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டபேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறியதாவது: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியில் அமருவார். அப்போது மகளிருக்கான உரிமைத் தொகை ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இது ஒரு மிருகத்தனமான செயல்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்," என்று அவர் உறுதியளித்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement