advertisement

தூத்துக்குடி கோவிலில் பிரச்சனை - இந்து மக்கள் கட்சி கண்டனம்

மார். 15, 2026 5:39 முற்பகல் |

 

இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில்,தூத்துக்குடி இராமசாமிபுரம் 3வது தெருவில் அமைந்திருக்க கூடிய ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோயில் சமீப காலத்தில் தான் கும்பாபிஷேகமானது நடைபெற்று தற்போது கொடை விழாவும் நடைபெற்றது.

தற்போது திருக்கோவிலில் ஒரு பிரிவினர் இக்கோவில் எங்களுக்கு தான் சொந்தம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள். மேலும் வழக்கு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாக கூறி திருக்கோவிலின் கர்ப்பகிரக வாசலில் பெண் ஒருவர் அமர்ந்து தற்போது உள்ள நிர்வாகத்தினரை வெளியேறுமாறு தகராறு  செய்து வருகிறார். மாற்று மதத்தை சேர்்த பெண் திருக்கோவில் உடைய கற்பகிரக வாசலில் அமர்ந்திருப்பது கண்டனத்திற்குரியது 

இந்து கோவிலை, கிறித்துவ தம்பதி தங்கள் கோவில் என்று சொல்லிக் கொள்வது  எதற்காக ? 
சந்தன மாரியம்மன் கோவிலில் கிறிஸ்தவர்களுக்கு என்ன வேலை ?அப்பகுதியில் உள்ள பெரும்பாலான இந்துக்களால் வழிபடக்கூடிய இத்திருக்கோவிலில் இதுபோன்ற நபர்களின் செயல்களால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் . ஆகவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement