பரமக்குடியில் லோக் அதாலத் - ரூ. 2.85 லட்சத்திற்கு தீர்வு
பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 408 வழக்குகளில் ரூ 2, 85, 82,237 தீர்வு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் , முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப்அலிகான் உத்தரவின் படி , ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 408 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 2,85,82,237 (இரண்டு கோடியே எண்பத்திஐந்து லட்சத்து எண்பத்தி இரண்டாயிருத்தி இருநூற்றி முப்பத்தி ஏழு) அறிவிக்கப்பட்டது.
வழக்கு நிகழ்விற்கு , கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன் ,சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார். அமர்வு வழக்கறிஞர்கள் திருமூர்த்தி , நந்தகோபால் கலந்து கொண்டனர். மூத்த இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் முத்து விஜயன் உள்பட சட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்