advertisement

மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பாஜக அரசு தவறாக ஸ்டாலின் குற்றச்சாட்டு

டிச. 16, 2025 9:50 முற்பகல் |

 

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய பாஜக அரசு, மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துகிறது. இதனை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது. எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லாமல், இதுபோன்ற வழக்குகள் அரசியல் எதிரிகளை துன்புறுத்துவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் மட்டுமே போடப்படுகின்றன.
மத்திய அரசின் பழிவாங்கும் அணுகுமுறையால் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகிறது. அத்துடன், அவற்றை அரசியல் மிரட்டலுக்கான கருவிகளாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.”இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement