advertisement

தொழிலாளர் நல வாரியம் மூலம் பயன் பெற்ற பெண் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

டிச. 16, 2025 8:22 முற்பகல் |

தொழிலாளர் நல வாரியம் மூலம் பயன் பெற்ற வன்னிக்குடி சரஸ்வதி  தமிழ்நாடு முதல்வருக்கு  நன்றி தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலன் , திறன் மேம்பாட்டுத்துறை, தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பணியை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கவும் தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது.  தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமானம், உடலுழைப்பு, ஆட்டோ ஓட்டுநர் போன்ற 18 வகையான வாரியங்கள் உள்ளது.இதில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் கொத்தனார், சித்தாள், எலெக்ட்ரிசியன், தச்சர், பெயின்டர் என 54 வகையான தொழில்கள் செய்வோர் இதில் உறுப்பினர் ஆகலாம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் தையல் ஆட்டோ ஓட்டுநர், பதனீர் தயாரித்தல், கைத்தறி நெசவு, சைக்கிள் ரிப்பேர் போன்ற 62 வகையான தொழில்கள் செய்வோர் இதில் உறுப்பினர் ஆகலாம்.
வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய வயது 18 முதல் 59 வரை இருக்க வோண்டும்.  இஎஸ்ஐ பிஐ பிடித்தம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆதார் அட்டையுடன் கைப்பேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

மேலும் , தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரையில் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, ஓய்வூதியம், வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்குதல், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 1 இலட்சம் ரூபாய் மானியம் வழங்குதல், இணைய வழியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு  ஸ்கூட்டர் வழங்குவதற்கு மானியம் வழங்குதல் போன்ற திட்டங்கள் வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
மேலும் , கட்டுமான தொழிலாளர்களுக்கான பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை நலவாரியத்தல் பதிவு பெற்ற , பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் ரூபாய் 8 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர் நலன் , திறன்மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமானம் , அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 58,851 பயனாளிகளுக்கு ரூ.34,47,92,961/- மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைந்த தொழிலாளி சரஸ்வதி தெரிவித்ததாவது :

என் பெயர் சரஸ்வதி. எனது கணவர் பெயர் சௌந்திரபாண்டியன். எனது சொந்த ஊர் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், வன்னிக்குடி கிராமம் ஆகும். எனது கணவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சென்ற இடத்தில் புதிதாக கட்டப்படும் வீட்டின் படிக்கட்டுக்கான சென்ட்ரின் பலகையை அகற்றும் போது படிக்கட்டுகள் இடிந்து விழுந்து மரணம் அடைந்தார். இந்த செய்தியை கேட்டறிந்தவுடன் தொழிலாளர் உதவி ஆணையர், ராமநாதபுரம் அலுவலர் அலுவலகத்திலிருந்து என்னை தொடர்பு கொண்டு என்னிடம் எனது கணவர் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் என் கணவர் நலவாரியத்தில் பதிவு பெற்றவரா? என கேட்ட பொழுது நான் பதிவு பெறவில்லை என சொன்னேன். பதிவு பெறாத கட்டுமானத் தொழிலாளிகள் பணியிடத்து விபத்தில் மரணமடைந்தாலும் தொழிலாளர் நலவாரியத்திலிருந்து ரூ.5.00.000/-உதவித்தொகை இழப்பீடாக வழங்கப்படுகிறது என தெரிவித்து என்ணை இணையதளத்தில் விண்ணப்பிக்க செய்தனர். எனக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற உதவினர்.

மேலும் , 2025 -2026 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் பதிவு பெற்ற கட்டுமான , பதிவு பெறாத தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் ரூ.8,00,000/- வழங்கப்படும் என கூறியது எங்களைப் போன்று எந்த ஆதரவும் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. மேலும் இழப்பீடாக கிடைத்த தொகையின் ஒரு பகுதியை எனது வங்கி கணக்கில் வரவு வைத்தும் மற்றொரு பகுதியை எனது குழந்தை பெயரில்  நிலையான வைப்பு நிதியாக அலுவலகம் மூலமாகவே வங்கியில் வரவு வைத்து எனது குழந்தையின் எதிர்காலத்திற்கும் உதவி செய்துள்ளனர்.

மேலும் , இதன் மூலம் கிடைத்த உதவித்தொகை எனக்கும் எனது குழந்தைக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். என்னைப் போன்ற கஷ்டப்படும் தொழிலாளர் குடும்பங்களின் சிரமங்களை உணர்ந்து எங்களுக்கு துணை நிற்கும் தழிழ்நாடு முதலமைச்சருக்கு என் சார்பாகவும், என்னைப் போன்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement