advertisement

சென்னை: வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது

ஏப். 12, 2026 4:43 முற்பகல் |

 

ஆவடியை அடுத்த பட்டாபிராம், பாரதிதாசன் தெருவை சேர்ந்த அந்தோணி (57), புழல் ஜிஎன்டி சாலையில் சர்வீஸ் சாலையில் தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா விற்பனை செய்து வருகிறார்.

நேற்றிரவு. இவரது கடைக்கு வந்த புழல், திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார் (33), சிக்கன் பக்கோடா வாங்கிவிட்டு அதற்கு பணம் தராமல் சென்றதும் அந்தோணி அவரிடம் பணம் கேட்டதில் தரமுடியாது என கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜ்குமார் சட்டியில் இருந்த கொதிக்கும் எண்ணெயை அந்தோணி மீது ஊற்றினார். இதில் அவருக்கு முதுகு, தோள்பட்டையில் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை அரசு பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் ராஜ்குமாரை கைது செய்து புழல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement