advertisement

நேர்மையாளன் தனித்து தான் வருவான் - சீமான்

ஏப். 11, 2026 9:11 முற்பகல் |


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் இரண்டாவது முறையாகப் போட்டியிடும் வேட்பாளர் பாலாஜி ராமச்சந்திரனை ஆதரித்து சீமான் இன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பிரச்சாரத்தின் போது சீமான் பேசியதாவது: நாங்கள் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்திருக்கிறோம். 20 கட்சிகளைச் சேர்த்து வைப்பது பெரிய கட்சி அல்ல; எத்தனை பேர் எதிர்த்து நின்றாலும் தனித்து நிற்பவனே வீரன். நேர்மையாளன் எப்போதும் தனித்துதான் வருவான். 60 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள், ஒரு தொகுதிக்காகக் கூட மற்றவர்களிடம் கையேந்துவது ஏன்?"

மேலும், அண்டை மாநிலமான கேரளாவையும், சிங்கப்பூரையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், அங்கு ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் இல்லை என்றும், தரமான கல்வி மற்றும் மருத்துவமே அங்கு முன்னுரிமை என்றும் குறிப்பிட்டார். 

"கள்ளச்சாராயம் குடித்துச் சாவது குற்றம் என்கிறது சட்டம். ஆனால், குடித்துச் செத்தவனுக்கு 10 லட்சம் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது இந்த அரசு. இதை மக்கள் ஏற்கிறீர்களா?" எல்லையில் நின்று நாட்டைக் காக்கும் ராணுவ வீரன் உயிரிழந்தால் ஒரு ரூபாய் கூடத் தராத இந்த அரசு, ஒரு நடிகரைப் பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு 12 லட்சம் வழங்குகிறது. இது என்ன மாதிரியான நீதி?" என ஆவேசமாக வினவினார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து அவர் கூறுகையில்: கல்வி மற்றும் மருத்துவம்: அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற நிலை உருவாக்கப்படும். கல்வி மற்றும் மருத்துவம் முழுமையாகக் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.  "இப்படியே விட்டால் இன்னும் சில நாட்களில் விளாத்திகுளமே காணாமல் போய்விட்டது என்று சொல்லும் நிலை ஏற்படும். இந்த அவலத்தைத் தடுக்க 'விவசாயி' சின்னத்திற்கு வாக்களியுங்கள்," என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement