தவெக பற்றி நோ கமெண்ட்ஸ் - மு.க.ஸ்டாலின் பதில்
பரமக்குடியில் நடைபயிற்சி வாயிலாக வேட்பாளர் கே.கே. கதிரவனுக்கு உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்த திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நெசவாளர் வீட்டில் நெசவு நெய்தும் ... டீ அருந்தியும் ... சிறு குழந்தைகளுக்கு கை குலுக்கி... கன்னத்தில் தட்டி கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 - ஐ முன்னிட்டு வரும் 23-ந் தேதி (வியாழன்) தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
அதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க. தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கே.கே. கதிரவனுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி (தனி) தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கே.கே.கதிரவனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக பரமக்குடி புறநகர் பகுதியான சரசுவதி நகர் பகுதியில் இருந்து பிரச்சார வாகனம் மூலம் பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தீயணைப்பு நிலைய பகுதி, சந்தைக் கடை பகுதியில் சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்களிடம் கையசைத்து வாக்குகள் சேகரித்த வண்ணமாய் வந்தார்.
தொடர்ந்து, சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது நடைபயிற்சி மூலமாக வாக்குகள் சேகரிக்க பஸ்நிலைய பகுதி, தேசிய நெடுஞ்சாலை , ஆர்ச் பகுதி, காந்திசிலை பகுதி, நகைக்கடை பஜார், ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் சாலையில் இருபுறமும் கூடியிருந்த பெண்கள், ஆண்கள், வியாபாரிகள், கட்சியினர்கள் அணிவித்த சால்வை, புத்தகங்களை பெற்றுக் கொண்டதுடன், 2-வயது லித்வின் என்ற சிறு குழந்தையிடம் மகிழ்ச்சி பொங்க கை குலுக்கி, கன்னத்தை தட்டிக் கொடுத்தும் ஆதரவு திரட்டினார். மகிழ்ச்சியில் திளைத்த குழந்தை லித்வினும் கை குலுக்கியும் கும்பிட்டும் மகிழ்ந்தது அங்கு கூடியிருந்த மக்களின் மனதை நெகிழச் செய்தது.
தொடர்ந்து, பூக்கடை பஜார், காந்திஜி ரோடு , முத்தாலம்மன் கோவில் பகுதி, பெரிய காய்கறி கடை பகுதியினுள் நடைபயிற்சி மேற்கொண்டு கடை வியாபாரிகள், காய்கறிகள் வாங்க வந்த வாக்காளர்களிடமும், மீன் கடை பஜாரில் மீன் வாங்க வந்த வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்ததுடன், திராவிட மாடல் ஆட்சி எப்படியுள்ளது ? என கேட்டபடியே சென்றார். மேலும், பரமக்குடி நகரசபை பகுதியான எமனேஸ்வரத்தில் நெசவாளர்கள் நிறைந்த பகுதிகளுக்கு நடைபயிற்சியாக சென்று வாக்கு சேகரித்ததுடன், அப்பகுதியில் வசித்து வரும் நெசவாளர் சாந்தாராம் என்பவரது இல்லத்திற்குள் சென்று நெசவு நெய்தபடியே, நெசவாளர்களது குறைகள் என்ன? என கேட்டறிந்தார் . அங்கு டீ அருந்தியபடி திராவிட மாடல் ஆட்சி எப்படியுள்ளது ? என கேட்டு வாக்குகள் சேகரித்தார்.
அப்பகுதியில் நெசவாளரது பச்சிளம் குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். நடைபயிற்சியின் போது, சாலையின் இருபுறமும் தி.மு.க. நிர்வாகிகள், அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், நகர்மன்றத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், மாநில, மாவட்ட, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், பெண்கள், ஆண்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், வாக்காளர்கள் என கூடியிருந்த போதிலும், குழந்தைகளை கண்டவுடன் அவர்களிடம் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது மக்கள் மனதை ஊடுருவச் செய்தது.நடைபயிற்சியின் போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
" ஜனநாயகன் " படம் லீக்கானது குறித்து பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும்,
த.வெ.க. குறித்து கேட்டதற்கு,
நோ. கமெண்ட்ஸ் என கூறினார்.
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரமக்குடி நகராட்சி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தது பரமக்குடி மக்கள் மனதை கவர்ந்ததுடன் ... பேசும் வார்த்தைகளாக வலம் வந்த வண்ணமாய் உள்ளது.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்