advertisement

இபிஎஸ் காமெடி அரசியல் செய்கிறார்: கான்ஸ்டண்டன் ரவீந்திரன்

ஏப். 12, 2026 4:15 முற்பகல் |

 


தூத்துக்குடி  தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவனை ஆதரித்துப் பிரசாரம் செய்த கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். மகளிர் உரிமைத் தொகையை வழங்க முடியாது என்று முதலில் கூறிவிட்டு, இப்போது தாமும் வழங்குவேன் என எடப்பாடி பழனிசாமி கூறுவது, வடிவேலுவின் 'நானும் ரவுடிதான்' பாணியிலான காமெடி அரசியலாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது என்றும், உரிமைத் தொகை ₹2,000-ஆக உயர்த்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

துப்பாக்கிச் சூடு பாதித்தவர்களுக்கு அரசு வேலை வழங்கிய முதல்வர் ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த, அமைச்சர் கீதா ஜீவனை 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement