advertisement

ராமநாதபுரத்தில் தேர்தல் விழிப்புணர்வு விளையாட்டு போட்டி

ஏப். 11, 2026 9:05 முற்பகல் |

ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் 100 சதம் வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் பங்கேற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

      தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில்   வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
         தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து பங்கேற்றார்.
         இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
      இன்றைய நிகழ்ச்சியில் ‘MY INDIA MY VOTE 100% 23.04.2026’ என்ற வாசகம் விளையாட்டு உபகரணங்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்ததை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார்.
         தொடர்ந்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
        நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், உதவி திட்ட அலுவலர்கள் தங்கப்பாண்டியன், சித்ராதேவி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ. பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement