advertisement

மூத்த குடிமக்களிடம் வாக்கு சேகரிப்பு பணிகள் துவக்கம்

ஏப். 13, 2026 6:01 முற்பகல் |

 


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே தபால் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 5,407 வாக்காளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இதில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு 1,426 வாக்காளர்களிடமும் (658 மூத்த குடிமக்கள், 768 மாற்றுத்திறனாளிகள்), திருச்செந்தூர் தொகுதியில் 15 குழுக்கள் மூலம் 1,387 வாக்காளர்களிடமும் (800 மூத்த குடிமக்கள், 587 மாற்றுத்திறனாளிகள்) வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளன.

மேலும், விளாத்திகுளம் தொகுதியில் 11 குழுக்கள் மூலம் 731 வாக்காளர்களிடமும், தூத்துக்குடி தொகுதியில் 12 குழுக்கள் மூலம் 638 வாக்காளர்களிடமும், கோவில்பட்டி தொகுதியில் 12 குழுக்கள் மூலம் 615 வாக்காளர்களிடமும் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. குறைந்தபட்சமாக ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 12 குழுக்கள் மூலம் 610 வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 2,935 மூத்த குடிமக்கள் மற்றும் 2,472 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க உள்ளனர்.

இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 86 வாக்கு சேகரிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வாக்குச் சேகரிக்கும் பணி நேற்று (12.04.2026) காலை 9 மணி முதல் தொடங்கியுள்ளது. 
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement