advertisement

ஆர்எஸ்எஸ்.,சின் 2,501வது அமைப்பை அண்ணாமலை தொடங்கியுள்ளார் - சண்முகம்

ஜூன் 06, 2026 5:34 முற்பகல் |

 

பாஜகவிலிருந்து விலகி ‘இது நம்ம இயக்கம்’ என்ற புதிய கட்சியை தொடங்கிய அண்ணாமலை, தமிழகத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இதை ஆர்.எஸ்.எஸ். சார்ந்த 2,501ஆவது அமைப்பாக மார்க்சிஸ்ட் மாநில செயலர் சண்முகம் விமர்சித்துள்ளார்

பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி ஆரமித்திருக்கும் அண்ணாமலையை, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் விமர்சித்துள்ளார்.பாஜகவிலிருந்து விலகியுள்ள அண்ணாமலை, மாரீச மான் வேடமிடுவதாக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் ஏற்கெனவே 2 ஆயிரத்து 500 அமைப்புகளை நடத்துவதாகவும், அண்ணாமலை தொடங்குவது 2 ஆயிரத்து 501ஆவது அமைப்பு எனவும் கூறினார். பாஜக தமிழக மக்களிடம் எடுபடவில்லை என்பதால், பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என, மோடி - அமித் ஷா ஆசியுடன் அண்ணாமலைமுயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார். ஆரம்பித்த 2 மணி நேரத்தில் இரண்டரை லட்சம் பேர் சேர்ந்திருப்பது, பாஜகவினர் அண்ணாமலையின் அமைப்பில் இணைக்கப்படுகிறார்கள் என்பதையே தெரிவிப்பதாகவும், சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement