advertisement

தூத்துக்குடி : கஞ்சா வைத்திருந்த இளைஞர்கள் கைது

ஜூன் 05, 2026 6:11 முற்பகல் |

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் அருகே  போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (20), அழகேசபுரத்தை சேர்ந்த ராஜேஷ்(20), SS மாணிக்கபுரத்தை சேர்ந்த அருண்குமார்(22) மற்றும் திருநெல்வேலி சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த மாயகணபதி(24) ஆகிய 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement