பரமக்குடி சௌராஷ்ட்ரா பள்ளி ஆசிரியை கெளரவிப்பு
ஜூன் 07, 2026 1:47 முற்பகல் |
பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அ.சண்முகப்பிரியாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல். ரெஜினிவினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை அ. சண்முகப்பிரியா பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தந்ததற்காக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல். ரெஜினி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டி சிறப்பித்தார்.
பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆசிரியை அ.சண்முகப்பிரியாவை கல்வி துறையினர் , தலைமையாசிரிய பெருமக்கள் உள்பட ஆசிரிய பெருமக்கள் , பெற்றோர்கள், கல்வி- சமூக ஆர்வலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டிய வண்ணமாய் உள்ளனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்