advertisement

நாங்குநேரியில் 85 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்தவர் கைது

ஜூன் 06, 2026 4:50 முற்பகல் |

 

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சூரங்குடியில் இருந்து ஏர்வாடி செல்லும் ரோட்டில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஏர்வாடியை சேர்ந்த சுரேஷ் (வயது 39) என்பவரை சோதனை செய்தனர்.

அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 85 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சுரேஷை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 85 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement