அம்மா பூங்காவை ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு
பட்டினம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்காவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டினம்காத்தான் ஊராட்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் அம்மா பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பட்டினம்காத்தான் ஊராட்சியில் அம்மா பூங்காவிற்கு சென்று அதன் உட்கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அதிக அளவில் பொதுமக்கள் வருகை தந்து நடைபயிற்சி மேற்கொள்வதுடன், அதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும் , இதை விரிவுபடுத்த அலுவலர்கள் திட்டமிடுதல் வேண்டும். அதேபோல் பூங்காவில் உட்கட்டமைப்புகளையும் விரிவுபடுத்திட வேண்டும் என அலுவலர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம். சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார். பின்னர், மாவட்ட சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்திற்கு சென்று விளையாட்டு அரங்கில் சின்தடிக் மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
தொடர்ந்து , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சர்வதேச அளவிலான வேலுமாணிக்கம் ஹாக்கி விளையாட்டு மைதானத்தை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்