சென்னை : சிறுமிக்கு பாலியல்வன்கொடுமை, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
ஜூன் 07, 2026 1:58 முற்பகல் |
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த வீட்டு பணி செய்யும் தம்பதியரின் 8 வயது சிறுமியை, அதே குடியிருப்பில் வசிக்கும் 55 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 30-ந்தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 55 வயதான நபரை கைது செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளார்.





கருத்துக்கள்