advertisement

கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை: காவல்துறையினருக்கு தூத்துக்குடி எஸ்.பி. பாராட்டு

ஜூன் 07, 2026 2:05 முற்பகல் |


  
தூத்துக்குடியில் முத்தையாபுரம் மற்றும் மெஞ்ஞானபுரம் ஆகிய 2 காவல் நிலைய கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (5.6.2026 அன்று) தீர்ப்பு வழங்கியது.
 
மேற்சொன்ன முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக பணிபுரிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஜெனோவா ஜெனால்ட் கிளிண்டன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா நேற்று நற்பணி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement