தூத்துக்குடி : டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்
தூத்துக்குடி செல்வ விநாயகர் புரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்களுடன் சேர்ந்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது.
பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றிட வேண்டும் என்ற உத்தரவில், தூத்துக்குடி பகுதியில் மொத்தம் 63 கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் 9970 என்ற எண் கொண்ட மேற்படி கடைக்கு 10 மீட்டர் தொலைவில் செல்வ விநாயகர் கோவிலும்,100 மீட்டர் தொலைவில் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களும் மேலும் மருத்துவமனைகளும் அமைந்துள்ளது. மேலும் இந்த கடையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடப்பதை வழக்கமாக உள்ள இந்தக் கடையை அகற்றக் வேண்டிய பட்டியலில் இல்லாமல் இருந்தது ஆச்சரியம் அளிக்கிறது
மேலும் தூத்துக்குடி நகர் பகுதியில் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அதிகப்படியான குடிமக்களின் வருகையால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பெண்கள் நடமாட முடியாத சூழலும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் இந்த கடையை உடனடியாக இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 150 க்கும் மேற்பட்டோர் திரளாக ஒன்று கூடி இன்று போராட்டம் நடைபெற்றது.
இதனுடன் இந்து மக்கள் கட்சியின் சார்பாக நானும் கலந்து கொண்டு அக்கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் .மேலும் டாஸ்மார்க் மேலாளர் அவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து வருகின்ற 10 நாட்களில் அந்த கடையை அகற்ற முடிவெடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் 11 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் மதியம் 3 மணி அளவில் நிறைவு பெற்றது. 10 நாட்களில் கடை அடைக்கப்படாவிட்டால் மீண்டும் அப்பகுதி மக்களோடு மிகப்பெரிய ஒரு போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை அதிகாரிகளிடம் தெளிவு படுத்தினோம். இது சம்பந்தமான புகார் மனுவை அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் கையெழுத்தோடு இந்து மக்கள் கட்சியின் சார்பாக கொடுக்கப்பட்டது.





கருத்துக்கள்