அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது தவெக
செப். 10, 2026 9:03 முற்பகல் |
விஜய் 2024 ம் ஆண்டு பிப் 2 ம் தேதி ஆரம்பித்த தவெக சந்தித்த முதல் தேர்தலிலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக்கழக தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7-ஆக உயர்ந்துள்ளது.





கருத்துக்கள்