advertisement

சென்னை: பெண் அரசு அதிகாரிக்கு பாலியல் தொல்லை - சக அதிகாரி கைது

செப். 11, 2026 4:05 முற்பகல் |


 
சென்னை: பெண் ஜிஎஸ்டி ஆய்​வாள​ருக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக சக ஜிஎஸ்டி ஆய்​வாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சென்​னை​யில் உள்ள ஜிஎஸ்டி (சரக்கு மற்​றும் சேவை வரி) அலு​வல​கம் ஒன்​றில் ஆந்​தி​ராவைச் சேர்ந்த 32 வயது பெண் ஒரு​வர் ஜிஎஸ்டி ஆய்​வாள​ராக பணி​யாற்றி வரு​கிறார். இதே அலு​வல​கத்​தில் மேற்கு வங்​கத்தை சேர்ந்த சவுரவ் (28) என்​பவரும் ஜிஎஸ்டி ஆய்​வாள​ராக பணி​யாற்றி வரு​கிறார்.

இந்​நிலை​யில், சவுரவ் தன்​னுடன் பணி​யாற்றி வரும் பெண் ஆய்​வாள​ருக்கு கடந்த சில நாட்​களாக பாலியல் தொல்லை அளித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.  இதனால் மன உளைச்​சலுக்கு ஆளான பெண் ஆய்​வாளர், சம்​பவம் குறித்து திரு​மங்​கலம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

புகாரின் பேரில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர். இதையடுத்து சவுரவ் மீது பெண் வன்​கொடுமை தடுப்புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து அவரை கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement