ஸ்காட் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் “ஃப்ரெஷர்ஸ் டே 2026” வரவேற்பு விழா திங்கள்கிழமை காலை பாபு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. 300கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, இறைவணக்கம் மற்றும் குத்துவிளக்கேற்றுதலுடன் விழா தொடங்கியது. கல்லூரி முதல்வர் டாக்டர் கே. கணேசன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, கல்லூரியின் சிறப்பம்சங்கள் மற்றும் SCAD நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த காணொளி திரையிடப்பட்டது.முதல்வர் தனது உரையில், கல்லூரியின் கல்விச் சூழல், பல்வேறு துறைகள், ஆய்வக வசதிகள், மாணவர் செயல்பாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். மாணவர்கள் ஒழுக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
தொடர்ந்து, AI&DS, IT, CSE, ECE, EEE மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகள் குறித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், கல்லூரியின் மாணவர் சாதனையாளர்கள் தங்களது திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, ஹேக்கத்தான் மற்றும் கல்வி சார்ந்த அனுபவங்களை புதிய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் SCAD குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ். கிளீட்டஸ் பாபு தலைமை விருந்தினராகப் பங்கேற்று, புதிய மாணவர்களை வாழ்த்திப் பேசினார். கல்லூரியில் வழங்கப்படும் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
டாக்டர் எஸ். ஜான் கென்னடி மற்றும் டாக்டர் எம். முகமது சாதிக் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவிற்கான நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை நிர்வாக அலுவலர் திரு. வெங்கடசுப்பிரமணியன் மேற்கொண்டார். பேராசிரியர் அகாடமிக்ஸ் டாக்டர் எஸ். சுந்தரராஜன் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.





கருத்துக்கள்