advertisement

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின முன்னேற்பாடு பணிகள்- அமைச்சர் மதன்ராஜா ஆய்வு

செப். 11, 2026 3:33 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் 11.09.2026-ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 10.09.2026 -ந் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், தமிழ்நாடு குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா  மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு , பாதுகாப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் திரளாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறை, வாகன நிறுத்துமிடம், கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை தமிழ்நாடு குறு,சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா பார்வையிட்டார்.

அதன் அடிப்படையில், சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் மணிமண்டபத்தை தமிழ்நாடு குறு,சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா பார்வையிட்டு, அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். பொதுமக்கள் நுழையும் வழி , வெளியேறும் வழிகளை முறையாக ஒழுங்குபடுத்தவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் தடுப்புகள் அமைத்து தேவையாள பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள காவல் கண்காணிப்பாளரை அறிவுறுத்தினார்.
      தொடர்ந்து, நினைவிடப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதால், அவர்களது வாகனங்கள் எந்தவித இடையூறும் இன்றி வந்து செல்லும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
      மேலும், பொதுமக்கள் , அஞ்சலி செலுத்த வருபவர்களின் பேருந்துகள் , வாகனங்களை நிறுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு மகளிர் கலை , அறிவியல் கல்லூரி மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், வாகனங்கள் வரும் வழி , வெளியேறும் வழிகளை தனித்தனியாக ஒழுங்குபடுத்தி, ஒருவழிப் போக்குவரத்து முறையில் வாகனங்கள் சீராக இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். 
         மேலும், வாகன நிறுத்துமிடத்தில் தேவையான காவல்துறை பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
       அதனைத் தொடர்ந்து, பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையையும் தமிழ்நாடு குறு,சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
           பரமக்குடி நகர்  முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதையும், பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் ட்ரோன் மூலமாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.
         மேலும், நினைவு தின நிகழ்வின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்கூட்டியே மேற்கொள்ளவும், அவசரகால சூழ்நிலைகளில் சம்பந்தப்பட்ட துறையினர் ஒருங்கிணைந்து உடனடியாக செயல்படும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
      சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறையை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
       சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின்  நினைவு காவல்துறை நிகழ்வை முன்னிட்டு பரமக்குடி நகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் தமிழ்நாடு குறு,சிறு , நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா ஆய்வு செய்தார்.
       ஆய்வின் போது , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் , பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச.வினோதினி பார்த்திபன் , பரமக்குடி நகராட்சி ஆணையாளர் தாமரை, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட காவல்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement