இமானுவேல் சேகரனாரின் தியாகங்களை நினைவு கூர்வோம் - கனிமொழி
செப். 11, 2026 4:14 முற்பகல் |
இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





கருத்துக்கள்