advertisement

தூத்துக்குடி : செப் 11 ல் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

செப். 10, 2026 7:11 முற்பகல் |

 

தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் நாளை (செப்.11) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் கீழ‌ அரசடி, மேல அரசடி, திரேஸ்நகர் சாகிர் உசேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், திரேஸ்புரம் பூபாலராயர் புரம், மாணிக்கபுரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, தளவாய்புரம், பட்டிணமருதூர், ராமர்விளை, குருஸ்புரம் மாப்பிள்ளையூரணி, ஜோதிநகர், ஆரோக்கியபுரம், தாளமுத்துநகர், நேரு நகர், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணா புரம்,

ஹவுசிங்போர்டு, குமரன் நகர், கோவில்பிள்ளை விளை, குருஸ்புரம், பணையூர், வெள்ளப்பட்டி, தருவைகுளம், T.சவேரியர்புரம், மாதா நகர், ராஜபாளையம், சிலுவைபட்டி, ஆனந்தமாடன் பச்சேரி, உப்பள பகுதி, முத்தையார் காலனி, அ.குமாரபுரம், மேலமருதூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement
advertisement