நாட்டுச் செங்கல் ,தள ஓடு உரிமையாளர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்
நெல்லை தென்காசி மாவட்ட சேம்பர் பிரிக்ஸ் நாட்டுச் செங்கல் மற்றும் தள ஓடு உரிமையாளர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்சங்க செயலாளர் அந்தோணி பாண்டியன், பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பேசினர்நாட்டு செங்கல் தள ஓடு மற்றும் சேம்பர் பிரிக்ஸ் உரிமையாளர்களுக்கு உரிய உரிமத்தை விரைந்து வழங்க வேண்டும். கடந்த 6 ஆண்டுகளாக கனிம வளத்துறையில் செலுத்திய உரிம கட்டணங்களை மற்றும் பெற்ற ரசீதுகளின் அடிப்படையில் உரிய உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களையும் முறையாக செலுத்த உற்பத்தியாளர்கள் தயாராக இருப்பதால் சட்டப்படி தொழில் நடத்துவதற்கான அனுமதிகளை வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள் அச்சமின்றி பாதுகாப்பாக பணிபுரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு செங்கல் தள ஓடு மற்றும் சேம்பர் பிரிக்ஸ் உற்பத்திக்கு தேவையான மண்ணை அரசுக்கு கட்டணம் செலுத்தி போதிய குளங்களில் இருந்து எடுக்க அனுமதி வழங்க வேண்டும். உரிமை மற்றும் மண் அடுப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





கருத்துக்கள்