ஆழ்வார்குறிச்சி : சைவ வேளாளர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா கோலாகலம்
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர் சங்கம் சார்பாக ஐம்பெரும் விழா 05.09.2026 சனிக்கிழமை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஐம்பெரு விழாவிற்கு சங்கத்தின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார் உப தலைவர்கள்
வள்ளிநாயகம், ராமையா பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில மண்டல இணை செயலாளர்,ஆழ்வார்குறிச்சி கீழத்தெரு சைவ வேளாளர்
சங்க செயலாளர்
ஆ.சை.மாணிக்கம் வரவேற்புரையாற்றி ஐம்பெரும் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்
இந்த ஐம்பெரும் விழாவில் 5 முக்கிய நிகழ்வுகள் ஒரே மேடையில் நடத்தப்பட்டது சிறப்பம்சமாகும்
1. 43-வது ஆண்டு விழா:
கீழத்தெரு சைவ வேளாளர் சங்கத்தின் 43-வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் 43 ஆண்டு கால சேவைகள் குறித்து நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்
2. முதியோர் பாராட்டு விழா:
சமுதாயத்தின் வழிகாட்டிகளான 80 வயதை கடந்த 23 மூத்த உறுப்பினர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுக் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
3. குழந்தைகள் கலைத்திருவிழா:
சங்கத்தைச் சேர்ந்த குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் வெகுவாக ரசித்தனர்
4. மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா:
2025-2026 கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும்
தென்காசி மாவட்ட சிறந்த செவிலியர் சாதனையாளர் விருதினை தென்காசி மாவட்ட கலெக்டர் திருக்கரங்களால் பெற்ற திருமதி சை.முத்து உள்ளிட்ட அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் கள் நினைவுக்கேடயம் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது
5. வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள் விழா:
காலை 7.00 மணிக்கு சங்கத்தில் கொடியேற்றப்பட்டு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் மடத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது
வ.உ.சி.யின் தியாக வரலாறு குறித்து சிறப்புரை நிகழ்த்தப்பட்டது
தென்காசி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க செயலாளர் TP.நாகராஜன், மாநில பொருளாளரும், மாவட்ட துணைத் தலைவர் S.செண்பகம், மாவட்ட துணைத் தலைவர் முனைவர் சு.சிவசங்கர், பசுமை நாயகன் நல்லாசிரியர் ச மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
தமிநாடு சைவ வேளாளர் சங்க மாநில துணைத் தலைவர், மாவட்ட அமைப்பு செயலாளர் M. அய்யம்பெருமாள் வஉசி பற்றி எழுச்சியுரையாற்றினார்கள்சமுதாயத்தின் வழிகாட்டிகளான 80 வயதை கடந்த 23 மூத்த உறுப்பினர்கள் சார்பில் மேனாள் சங்க தலைவர் ம. சங்கரநாராயணன் அவர்கள் ஏற்புரையாற்றினர்கள்
இந்த ஐம்பெரும் விழாவில் சைவ வேளாளர் சமுதாய பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் குழந்தைகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை செயலாளர் ஆ.சை.மாணிக்கம் உள்ளிட்ட கீழத்தெரு சைவ வேளாளர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்ஐம்பெரும் விழா முடிவில் அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டதுநன்றியுரை சங்க பொருளாளர் க.ராமலிங்கம் நன்றியுரை கூறினார்கள்





கருத்துக்கள்